இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
கோவேந்தன்
மனைவி, மக்கள் இருக்கையிலே விரும்பி
காதொருத்தி மீது காமம் அரும்பி,
மனைவி புதுக் காதலனைத்
தேடுகின்றாள் என்றவுடன்
மனக்குரங்கு மீண்டதடா திரும்பி!
◯
வெள்ளம்கரை ஏறிவிடின், எறும்பு
வெள்ளம் வாழும் மீன்களுக்கு விருந்து!
வெள்ளம் வற்றி மீன்கள் நிற்பின்,
வீறுடைய எறும்புகட்கு
வெள்ளமீன்கள் அத்துணையும் கரும்பு
◯
நோயாளிகள் மருத்துவர்பா லிருந்து
மீளுவதே மாபெரிய மருந்து;
நோயில்லாத நாட்டு மக்கள்
நுகத்தடியை வீசிவிட்டுப்
போய் உரினை நாடு கொள்வார் விரைந்து:
◯
பாஞ்சாலி பதவியிலே இருந்தாள்.
பாண்டவர்கள் துய்ப்பினாலே இறந்தாள்.
வீழ்ந்தால்போதும் என்றிருந்த
கெளரவர்கள் விம்மி விம்மி