இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
கோவேந்தன்
கள்ளர்குகை கோயில் என்றார் ஏசு,
காமக்கூடம் என்றார் காந்தி: காசு
கொள்ளைக்கிடம் என்ருர் பெரியார்:
கொள்கையிலாக் கூட்டம் இன்று
கொலைபுரியும் சூழ்ச்சி இடம்: பேசு!
◯
ஆட்சியே அல்லல்பட்டால் வெம்பும்.
தெரியாமையால் புரியாமையால்
செய்துவிட்ட தப்புக்கெல்லாம்
திரும்பிப் பார்த்துப் புரட்சிசெய்ய விரும்பும்:
◯
குற்றங்களைச் செய்வதிலே அப்பன்,
குறுஞ்செடியும் காவலராய்க் குப்பன்
நிற்பதாக நடுநடுங்கி
நிழற்கும் அஞ்சிப் புல் தடுக்கிக்
குடங்கி வீழ்ந்தான் எதிரில் காவல் சுப்பன்:
◯
பலமுறை நான் செத்தேன் என்றான் நடிகன்,
படங்களிலா என்று கேட்டான் பொடியன்:
இல்லை,இல்லை, நம் செய்தி ஏட்டில்
இறப்பு நிகழ்ச்சி பார்த்துப்பார்த்துக்
குலைதளர்ந்தேன் என்றான் நடிப்புத் தடியன்!
}}