பக்கம்:குறும்பா.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

23



சிந்திப்பதே குற்றம் என்றான் மணியன்;
செய்பணியில் அன்பு, நேர்மை சனியன்’
முந்துவதால் முழுக்குப் போட்டேன்
மூளை எதற்கு? என்கையிலே .
வந்திடுக ஆட்சிக்கென்றான் முனியன்!

o

ண்டுக்கொரு குறைவிடுத்தால் ஆயுள்
நீளும் என்றார், ஓர் அறிஞர்; நோயுள்
நீண்டிருந்தவன் மனக்கணக்கில்
நினைத்துப் பார்த்தான் குறை ஆயிரம்
மூண்டு நின்றன, மூச்சுவிட்டான் பாயுள்!

o

லைச்சோறு இல்லா உளறல்வாய்ச் செருக்கன்
தனைச்சேர்ந்தான், பித்தேறிய கிறுக்கன்;
நிலைகொளாமல் இருவருமே
நிறைந்திருந்தார் எவ்விடத்தும்
குரைத்துவந்தார் என்ன செய்வான் அருக்கன்?

o

செந்தமிழால் பதவியினைப் பெற்றான்
செருக்கின்நுனிக் கொம்பேற லுற்றார்;
சிந்தனையின் செழிப்புள்ளார்
சேர்க்கைக்கு அஞ்சி மாற்றானிடம்

தந்துவிட்டேன் என்னையென்று விற்றான்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/26&oldid=1199706" இலிருந்து மீள்விக்கப்பட்டது