இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
25
மருத்துவமும் பொறியியலும் படித்தால்
மண்டும்பணம்-சுரண்டல்கருவி முடித்தால்!
திருமணத்தால் பெண்ணும் பொருளும்
சேர்ந்தும், தொழில் தெரியாததால்
தெருவார், ஊரார் அனைவருமே துடித்தார்!
o
கடன் கொடுத்துக் கொடுவட்டியில் பிழைத்தான்
கடனுக்காக வழக்குமன்றுக்கு அழைத்தான்;
இடறி விழுந்தான் படிக்கட்டிலே
கடன்காரர் கை கொடுத்தார்,
அடடே எமன் இறப்புலகில் நுழைத்தான்!
o
உழைப்பு, கண்ணீர், குருதி, சாவினாலே
ஓங்கும் பல கட்சிக் கொடிகள் மேலே;
தழைக்கும் பொது வுடைமை; பெறாத்
தன்னலத்தின் தான்தோன்றிகள்
விழையும் கொடி விழா அனைத்தும் பாழே:
o
குடியாட்சி கொண்டெழுந்த நாட்டில்
குடும்பம் ஒன்று தொடர்ந்தாட்சிக் கோட்டில்
முடியாட்சியின் பரம்பரை போல்
முட்டாள்களே தேர்ந்தெடுத்ததால்