இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
கோவேந்தன்
பொய்புரட்டின் அரசியலில் வாழ்ந்தோன்
போனநாளின் நினைவினூடே ஆழ்ந்தான்;
மெய் நடுங்க, ஊழல் நோய்கள்
மிக நெருக்க வலுவிழந்தே
ஐயோ ஐயோ எனப்பதறி வீழ்ந்தான்!
◯
'அனைத்தையுமே அறிந்தவர் எம் அப்பா
அடுத்துள்ளவன் நான் ஒருவன் தப்பா?'
எனப்புகன்றான் கல்லாடன்; சரி
எவர் எழுதியது கல்லாடம் என்றேன்
வனக்குதிரைக்கு அடிப்பதென்றான் சுப்பா!
◯
காய்ச்சலிலே படுத்துவிட்டான் மல்லன்
கடிதழைத்தான் மருத்துவரைக் கல்லன்:
காய்ச்சலிது நூற்றிரண்டு
மருத்துவமனைக்கு ஏகு என்றதும்
மீஉயர்வுப் பதிவேதென்றான் புல்லன்!
◯
சாத்தானுக்கு உடம்பெல்லாம் சிறங்கு
சத்துணவுத் திட்டவூழல் அரங்கு;
மாற்றான் மனைவி பொய், புரட்டு
மதுவிலக்கு, தீங்கரசை
ஏற்றுவந்தான் நடிகன் 'காமக் குரங்கு'!