இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
கோவேந்தன்
திரை நடிகை ஒருத்தியுடை தளுக்கில்
தேர்தலிலே அரசமைத்தான் குலுக்கில்:
கரையிலாத பாஞ்சாலியால்
கட்சிக்குள்ளே ஆயிரம் நோய்,
விரைந்துவிட்டில் விழுந்ததடா விளக்கில்!
◯
கொலைக்குக் கொலை நடந்துவிட்ட போது
கொலைப்படையை ஏவி விட்டான் கேது:
கொலைக்களங்கள் காணுவதில்
கோமகன்கள் காந்திபேரால்
நிலைத்துவிட்டார் நாய்நரிக்குத் தோது!
◯
இனங்கள்பல மொழிகள் பல நாட்டில்
இணக்கம்இலா ஒருமைப்பாட்டுக் கோட்டில்
தனக்குள் பொதுமைக் கொள்கையிலாத்
தலைகொழுத்தார் வந்ததினால்
முனைப்பொற்றுமை பறக்குதடா காற்றில்!
◯
உயிர் துறந்தாள் நாட்டுக்காகத் தாயார்
உலகம் சுற்றினான் தீரா நோயால் சேயார்;
உயிர்பிரிந்த தாயை அறியான்
அறிந்தால் உயிர் பிரிந்திடுமாம்
பயல் இவனுக்கு நிகரும் உண்டோ தீயார்?