இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
39
வேலியற்ற.தோட்டமானாள் மாது.
விரைந்து கட்சியில் சேர்த்துவிட்டான் சேது.
கூலிக்கழும் கொள்கையிலாக்
கூட்டத்தினர் மேடையிட்டார்;
தோளில் மாலை; நோய்ச் சுரங்கம் இப்போது!
◯
இலக்கணங்கள் எண்ணங்கட்கு வேலி
என்றுசொன்னான் பெற்றோர் அறியா வாலி.
விலக்கிடுக முன்னோர் நெறி
விளையும்புத் திலக்கியம் என்றான்
இலத்தரசியும் விலக்கி விட்டாள் தாலி!
◯
இளைஞரெலாம் போர்ப்படையின் ஈட்டி,
இனியபொது வுடைமைக்குவழி காட்டி,
வளைந்திடாத எஃகுப் பாளம்,
வானளக்கும் விண்கணைகள்
நிலைக்கும் நட்பின் அமைதிப் போரின் தோட்டி!
◯
உலகறிய வேண்டுமென்ற முறையில்,
நாட்டு மன்ற உறுப்பினரை விரைவில்
பலரை வெளி நாடனுப்ப...
பகலிரவாய்ச் செய்ததினால்,
பலரும் கள்ளக் கடத்திலினால் சிறையில்!