இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
கோவேந்தன்
எப்பரிசும் தனக்கே என்றான் அகிலோன்
இந்திராணியாய் இருந்திட்டான் முகிலோன்!
தப்புடைய பரிசுக்குழு
தாளில் விழ ஒத்துழைத்தார்.
இப்போதுயிர் பரிசுக்கேங்கும் திகிலோன் !
◯
பொருள் சுரண்ட படம் எடுத்தான் முத்தன்
பொதுமக்களை என்ன நினைத்தான் பித்தன்?
குருதி விரும்பி வாளை நக்கி
குரைத்தழுத நாயெனவே
தெருவிலலைந்து கல்லடி பட்டான் எத்தன்!
◯
வடபுறத்தில் துறவிகளின் மடமாம்
தென்புறத்தில் கன்னிமாடம் திடமாம்!
இடை நடுவில் ஈராண்டில்
எழுந்தது பார் புது விடுதி
அட, அநாதைக் குழந்தைகளின் இடமாம்!
◯
மனைவிமார்கள் கடவுள் காதைக் கடித்தார்.
மகவுவலி ஆணும் கொள்ளப் பிடித்தார்:
இனி திசைந்தார் இறைவன். இவர்
இங்குப் பிள்ளைப் பெறுகையிலே.
கனவரல்ல, வேலைக்காரர் துடித்தார்.