பக்கம்:குறும்பா.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கோவேந்தன்


நாற்பது நாள் மருந்துகளைத் தந்தார்
நடுவழியில் பெற்றவரோ இழந்தார்;
பாற்கலந்து சாப்பிடணும்
பலன்தரும் நோய்க்கு என்பதை நினைந்தார்.
நாற்பது நாள் பாலருந்தி
நலம் அடைந்தார் மருந்தின்றிச் சிறந்தார்:



ஆதாயமும் புகழும் போட்டி இட்டன
ஆள் பிடித்துக் கால்பிடித்துத் தொட்டன;
ஏதாகிலும் செய்து பிறர்
எள்ளிடினும் தன் மானத்தை விற்றன.
கோதானாலும் கொள்கை இல்லாக்
கூத்தாடியின் பரிசு-பட்டம் பெற்றன.



வழியடைத்து வேலியிட்டான் குப்பன்
வலிந்து தாண்டிப் 'புதுக்கவிதை' அப்பன்,
குழிவிழுந்து, கால் இழந்து
கோலைக் கொண்டான்; வழிதிறந்தான் உப்பன்.
வழிவிடுத்து வேலி தாண்ட
வேறுவழி கண்டெழுந்தான் அப்பன்.



கடவுள் நினைத்தால் சேவல் முட்டை இடுமாம்
கானும் முட்டை மிகப்பெரிய வடிவாம்.
கடனைக் கேட்டுச் சேவல் கொண்டு
கணக்கில்லாத கோயில் ஏறிப் படிவான்,
கடவுட்கே நேர்ந்து விட்டான்
கடவுட் பூசாரி வயிற்றுக்கு அது விடிவாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/47&oldid=1201080" இலிருந்து மீள்விக்கப்பட்டது