குறும்பா
47
தஞ்சைக் கோயிலை வாங்குவேன் என்றான் பித்தன்
தான் அதனை விற்கேன் என்ருன் முத்தன்
தஞ்சையின் செய்தி ‘நிருபர்’ உடனே
“தமிழகத்தின் கோயில் எல்லாம் மொத்தம்
வஞ்சகமாக விற்கப்பட்டன...”
வாசித்த செய்தியால் அமைச்சரிட்டார் சட்டம்!
◯
துண்டணிந்தே உவமை உளறும் சோலை,
தொடைக்கும், தோட்கும் இடையிலாடும் மாலை;
கண்டொருத்தி கால்பிடிக்கையில்
கதவைத் தட்டினன் மற்றோர் காய்ந்த ஒலை;
துண்டெடுத்துத் தோளிலிட்டுத்
தெருவில்வந்தான் துலங்கிற்றவள் சேலை!
◯
கெட்டவராய் இருப்பின் வியப்பில்லை,
கேடுகெட்ட அரசியலின் எல்லை,
முட்டாள்களைத் தேர்வதிலும்
முனைத்தரசு ஆள்வதினும் தொல்லை,
வெட்கமற்று வாய் கிழிய
வெற்றறிவைக் காட்டல், வியப்பில்லை!
◯
வைப்பாட்டியாய் மூன்று மாதம் இருந்து
மாற்றானோடு சென்றாள் மருக்கொழுந்து.
கைப் பணத்தைக் கொண்டபின்பு
கண்டவர்பின் சென்று தன்னைத் துறந்து
தப்பாய் வாழ்ந்தான் கணவன் என்று
தலையில் அடித்துக் கொண்டாள்; ஊரார் விருந்து;