பக்கம்:குறும்பா.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

49


தன்னறிவைத் தான் புகழ்ந்தான் அருமை!
தமிழுக்கே அவனால் தானாம் பெருமை;
தன்றன் அறியாமையினைத்
தாள்கள் தோறும் தருகிறானே சிறுமை,
என்றெண்ணி இருக்கையிலே
இவனேவந்து தழுவியதோர் எருமை!



ஆன்றலிந்த அறிஞர்களின் பாதை
அடர்ந்த மரக் காட்டுமலை யோடை;
தோன்றுசல சலப்பின்றித்
துய்யமணத் தென்றல் தவழ்மேடை!
தான்தோன்றி தன் வாய் திறந்தான்
தாங்க வொணாத் தற்புகழ்ச்சி வாடை.



புரட்சி பட்டம் நடிகைக்கு என்றோர் அழைப்பு;
புரட்டமைச்சர் பேச்சிலென்ன தழைப்பு!
“புரட்சியென்றால் நடிப்பில், உடுப்பில்
புரண்டணைக்கும் கிளுகிளுப்பில் மழைப்பு;
வறட்சியின்றி ஐம்பதாண்டாய்
கதாநாயகி வழங்கினார்” என்றார், பிழைப்பு!



பன்மொழியில் புலவர் எங்கள் கவிகள்
பட்டுப் போகும் உங்களுடைச் செவிகள்;
தன்மொழியின் சொற்கள் விட்டுத்
தாவி அயல் சொற்களினால் கவிகள்
தம் வழியில் யாத்திடுவார்
தந்த பொருள் அத்துணையும் அலிகள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/52&oldid=1195855" இலிருந்து மீள்விக்கப்பட்டது