பக்கம்:குறும்பா.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

51


காகத்தினை வழிகாட்டியாய்ப் பெற்றுக்
கடலுலகைக் காண ஒரு சுற்றுப்
போக எண்ணிப் பூரிப்புடன்
புறப்பட்டான் இருக்கும் பணி விட்டு;
ஆக அது சேர்த்த முதல்
அரிய இடம் செத்த நாயின் புற்று!



சீற்றமுடன் பழிவாங்கலும் தேடிச்
சிறுமைகளாம் குட்டிகளைப் பாடி,
ஆற்றொணாத காமத்தினல்
அறியாமையின் தலைமையினை நாடி ,
நோற்றத்தினால் கொடுமை எனும்
நூறுபிள்ளை பெற்றனரே கூடி!



வட்டிக்கு மேல் வட்டிபெறும் செட்டி
வஞ்சனையில் பணம் சுரண்டும் கெட்டி;
எட்டி வங்கி பார்த்ததில்லை
இட்டுவப்பான் மறைத்து வைப்பான் பெட்டி;
குட்டித் தேளால் கொட்டிச் செத்தான்
கட்டிலின் கீழ் அறையில் பணத் தொட்டி!



முன்னிரவில் எல்லோருக்கும் விழிப்பு,
முதலிரவில் காதலர்க்கு விழிப்பு,
பின்னிரவில் அரசியலார்,
பிழைத்திருடர் கூட்டத்திற்கு விழிப்பு!
புன்மைகளால் நோயுண்டவன்
பொறாமையர்க்கோ எவ்விரவும் விழிப்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/54&oldid=1195861" இலிருந்து மீள்விக்கப்பட்டது