பக்கம்:குறும்பா.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

53


தப்புக்கெல்லாம் புகலிடமாம் சேரன்
சாக்கடையாம் சமூகத்திலே வீரன்,
குப்பைக் கூள அரசியலில்
கொள்ளையடித்துக் கொடுத்துயர்ந்தான் ஓரன்!
இப்போது அவன் மக்கள் பணம்
இருகோடியில் உடல் தேற்றும் தீரன்!



இளவழகன் பிறந்த ஊரோ கலவை
இன்று பல்கலைக் கழகத்திலே சலுகை
உளதாம் ஒரு சாதியினால்
உள்ளீடற்றும் இடம் பிடித்தான். செலவை
எளிதில் செய்யான் விருந்தழைப்பில்
இருப்பதெல்லாம் தின்னக்கேட்பான் பல கை!



திரைப் படத்தில் நடிப்பதற்குச் சென்றான்
சிறந்த சண்டைக் களத்தில் கட்டிப் புரண்டான்:
உரைக்கவொணா எரிச்சலோடும்
உடம்பெலாம்புல் லரிக்கிறதே என்றான்.
திரைக்கதைஞன் ‘ஆகா’ எனச்
“சீச்சீ, தரைப் புல் அரிக்கிறது என்றான்!



அதிகாரத்தின் இடங்கிடைத்தால் நோய்தான்
அருமை மக்கள் வாழ்வுனரா வாய்தான்,
குதிப் போடோங்கும் கீழாட்சிக்குக்
குடை பிடிக்கும்! மேலுயரப் பாய்தான்!
குறிக்கோளற்ற பாழாட்சியில் -
கோணலறிவு கொண்டவர்கள் நாய்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/56&oldid=1195864" இலிருந்து மீள்விக்கப்பட்டது