பக்கம்:குறும்பா.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கோவேந்தன்



இசைக்குப்பின் சொல்லடுக்கும் புலவன்;
எட்டுக் கால்களால் நடக்கும் அலவன்;
விசைக்குதிரை பின்நிறுத்தி!
முன்னால் வண்டி இணைக்கின்ற வலவன்;
திசைக்குத் திசை சொல்லும் பொருளும்
திக்கித் திணறும் கும்மிருட்டுப் புலவன்!



ஒருத்தியினைப் பின்தொடர்ந்தான் நாடன்
இருவரின் பின் பட்டிமன்ற மூடன்;
இருவர் என்ன? முந்நான் கென்றான்
இசைத்த பொருள் முதலாளியாம் வேடன்!
உருவம் பெண்ணாய் இருந்தால் நூறு
போதும் என்றான் படம் எடுக்கும் காடன்!



காய்த்து உணவிற்கு நின்றன தோட்டச் செடிகள்
கமழ்ந்து காற்றைத் தூய்மை செய்தன கொடிகள்.
ஏய்த்து மக்கட்கு இரண்டகம் செயும்
இனப்பகைவர்கள் அரசியல்முட் செடிகள்
வாய்ப்பந்தலிட்டு உட்பூசலால்
வளர்ந்து மண்டிய வெற்றுக்கட்சிக் கொடிகள்!



குள்ளமனம், கூறுகெட்ட கரியன்
குருட்டறிவுத் திறமையிலே பெரியன்!
எள்ளும் வண்ணம் உவமைகூறித்
தனக்கு நிகர் தானே என்றான் விரியன்.
கொள்ளைப் பொய்யன் குப்பைத்தொட்டிக்
குவமை இல்லை என்றான் மகன் அரியன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/57&oldid=1195865" இலிருந்து மீள்விக்கப்பட்டது