பக்கம்:குறும்பா.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

57

போர் காதல் இரண்டினையும் வைத்துப்
பொய்புரட்டுக் கற்பனைகள்பு தைத்து;
ஆர்க்கும் வர லாற்றுக்கதை
ஆக்குவதில் வீண்பெருமைஉ ரைத்து
மார் தட்டினான் வரலாற்றறிஞர்
வரக்கண்டோடினான் முகம்பு தைத்து!


இளவேனிற் காலம் எழிற் கன்னி;
கோடைக்காலம் இந்நாடாளும் மன்னி.
தளிர் உவக்க இலையுதிரும்
வறளைக் காலம் தவிக்கும் விதவைக் கன்னி
அளிக்கும் மழைக்காலம் இனிய
அன்பருமை காட்டுகிற அண்ணி!



நிகழ்காலம் இழந்திடும் ஒர் தடியன்
இறந்தகாலத் தேங்குகின்ற மடியன்:
உகந்த எதிர் காலத்திலே
உலகை ஆட்டிப் படைப்பனோ இப் பொடியன்?
தகவற்றுப் போய்விடுவான்
தனையறியாது அழிந்துபடும் குடியன்!



உழைப்பெதற்கோ என்று கேட்டான் மேலான்
உழைத்திடாமல் ஊர் உறிஞ்சும் நூலான்;
பிழைப்பை மதக் கடவுள் பேரால்
பேணும் அறியாமைக் குதவும் காலான்.
முழை உறங்கும் அரிமாவினும்
முப்போதலையும் நரிமாஅட மேலாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/60&oldid=1219429" இலிருந்து மீள்விக்கப்பட்டது