பக்கம்:குறும்பா.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

59



மாதவிடாய் போல பல கதைநூல்
மழைக்காலப் புற்றறீலாய்ச் சதைநூல்
ஒதரிய நூல்கள் என்றே
பொருள்சுரண்டும் ஒட்டுணிகள் புதைநூல்;
மாதம் மாதம் வெளியிடுவார்
மலடிபெற்ற காயடித்த விதைநூல்!



கொட்டாவி விட்டுக்கொண்டே காலைக்
குறட்டில்வைத்து நெய்துவிட்டான் சேலை;
பட்டாங்கில்லை என்பதினால்
பறிபோயிற்று நெய்துவந்த வேலை.
கெட்டான் கண் மூடி ஒடிக்
கிணற்றுள் விழுந்து இறந்துவிட்டான் மாலை!



பொதுமை இலாநாட்டுடைமை வங்கி
புகுந்திடுவார் உண்டிடுவார் பொங்கி;
எது எமக்கு நலன் செய்கவே
எனக்கேட்குமுன் ஆளவந்தார் தங்கிப்
பதுக்கிடுவார் கட்சிக்காகப்
பத்தாயிரம்பேர் வாழ்வை க்காட்டி முங்கி!



அலிக்கெதற்கு வைப்பாட்டியின் பற்று?
அறிவிலார்க்கேன் அரசியலில் சுற்று?
செவியிலார்க்கேன் புல்லாங்குழல்
தேனிசையாழ்ப் பண்ணொலியின் நெற்று?
விழியிலார்க்கேன் ஒளிக்கண்ணாடி,
வெறுத்தலைக்கேன் சீப்பினால் சுழற்று?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/62&oldid=1195876" இலிருந்து மீள்விக்கப்பட்டது