பக்கம்:குறும்பா.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கோவேந்தன்


அறிஞன் ஒரு குவளை மதுக் குடித்தான்
அறிவிலி ஒரு குவளை மதுக் குடித்தான்:
அறிஞன்அமைதி யாய் இருந்தான்
அறிவிலியோ அட்டகாசம் பிடித்தான்;
வெறிபிடித்த நாய்குலைக்க
வெட்கமற்றுக் குலைத்து அவனும் துடித்தான்!



திட்டத்தின்மேல் திட்டமிட்டான் நினைத்துத்
தேசநலன் தன் நலம் என்று இணைத்து
முட்டாள்களும் மூதறிஞர்
மூளையுள்ளோர் என்றமைச்சில் பிணைத்து,
உட்கார்ந்ததும் ஊழல்வென்றது;
ஓகோ என்றது கழுதையெலாம் கனைத்து!



தனக்கதிகம் தெரியும் என்று நின்றான்,
பொருள்கொடுத்துத் தலைவனாக வென்றான்;
தனக்கெதிராய் வாக்குறுதிகள்
தவறிடவே புரட்சிமக்களைக் கொன்றான்!
தனக்கெதிராய் மக்கள் திரளத்
தாங்கொணாமல் தற்கொலைக்கே சென்றான்!



"கண்டவரோடு சுற்றுவதை விடுவாய்
கண்டால் இனிக் கொலைசெய்யப் படுவாய்"
பெண் உரைத்தாள்: நாளுக்கொரு
கட்சியிலே பின்தொடர்ந்து கெடுவாய்,
கண்ணினைப்போல் கணவன் மனை
காட்சியிலே மாறிடுமோ படுவாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/63&oldid=1195878" இலிருந்து மீள்விக்கப்பட்டது