பக்கம்:குறும்பா.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

கோவேந்தன்



உழைப்பினாலே விளையும் பயிர் நாற்று
உலகுயிர்கள் அனைத்தினுக்கும் ஊற்று,
நுழைக்கும் விதி, சோம்பலூட்டும்
நோய்க்கடவுள் நம்பிக்கையை மாற்று.
உழைக்கும் மக்கள் அன்பில் உறவில்
உண்மையுண்டு மானுடத்தைப் போற்று!



கணவன்ஒரு பரத்தையின்பால் சென்றான்
மனைவி ஒரு பரத்தனிடம் சென்றாள்
கணவிருட்டில் திசைமாறினர்...
காதலர்என்று இருவரும்இதழ் தின்றார்,
யுணர்கையிலே கணவன் மனைவி
புரிந்ததும் ஒன்றும் நடவாததுபோல் சென்றார்!



வெஞ்சினத்துக் குமுறலையும் புரட்சிக்
கனலையும் தாம் வெளியிடலாய் வறட்சி
விஞ்சிநிற்கும் சிற்றுணர்ச்சி
ஊதும் நுரைக்குமிழிகளின் திரட்சி!
மிஞ்சும்குட்டி பொருளாளிய
மிகுவியப்பு வான்கோழியின் அரட்சி!



விலைமகளின் உறவினனாய் ஒருவன்
வீற்றிருந்தால், வந்திடுவான் மருகன்.
நிலைஎனவே ஆளரசில்
நிமிர்ந்திடுவோர் மக்கள் பக்கம் ஒருகண்
விலைகுறித்தால் துறந்திடுவார்
விலக்கிடுவார் அழித்திடுவார் மறுகண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/65&oldid=1201091" இலிருந்து மீள்விக்கப்பட்டது