பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vi

எனப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த கருத்தோடு இவ்வாறு பாடும் அதே நேரத்தில், குழந்தைகளுடைய நிலையிலேயே தம்மை வைத்துக் கொண்டு, கவிஞர்,

“தம்பி, தங்கை உனக்குண்டோ?

சாதி, சமயம் உனக்குண்டோ?
வம்பு வேண்டாம், என்தம்பி
வாட்டம் தீர்க்க வருவாயே!”

எனவும் பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திங்களில் ஒளவைப் பாட்டி இருக்கிறாள் என்றும், மங்கை ஒருத்தி கைராட்டினம் சுற்றுகிறாள் என்றும், மான் உண்டென்றும் பலர் பலர் கருதி வந்த கருத்துக்களின் பொருந்தாமையைப் புலப்படுத்தி, மக்களுக்குள் உள்ள சாதி சமய வேறுபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இப்பாடற் பகுதிகளில் கவிஞர் குறிப்பாக உணர்த்தி யுள்ளமை பாராட்டத்தக்கது.

இத்தொகுப்பில் வந்துள்ள சிற்றுார் பேரூர் பற்றிய வருணனைகள் முழுதும் படித்துச் சுவைக்கத் தக்கன. சிற்றுாரைச் சிற்றுாராகவும் பேரூரைப் பேரூராகவும் இவர் படம் பிடித்துக் காட்டும் பெற்றியைப் போற்றுதல் வேண்டும்.

“மாட்டை ஓட்டும் ஒருபிள்ளை!

மனையைக் காக்கும் ஒருபிள்ளை!
வீட்டிற் சமைக்கச் சுள்ளிதனை
வெளியில் தேடும் ஒருபிள்ளை!”

என வரும் பாட்டைப் படித்தால், சிற்றுார்க் காட்சி வெளிப்படும் என்பது உண்மை. சிற்றுாரில் அன்பும் வலிவும் அடக்கமும் வாய்மையும் உண்டு என்பதனையும், பேரூரில் வம்பும் தும்பும் வழிப்பறிக் கொள்ளையும் தெருப்புழுதியும்