பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாட்டி - II


39

பாட்டி பாப்பா ஆனாள்!
பாட்டி பாப்பா ஆனாள்!

நீட்டி விட்ட காலால்,
நில்லா தாடும் தலையால்,
கோட்ட மான முதுகால்,
குழறிப் பேசும் பேச்சால்- பாட்டி

சொள்ளை ஒழுக விட்டுச்
சோம்பித் துரங்கி விழுந்து,
பிள்ளை போலத் தன்னுள்
ஏதோ பிதற்றிக் கொண்டு- பாட்டி

பழுத்த பாட்டி கண்டு
பரிக சிக்க வேண்டாம்;
பழுத்த ஓலை எல்லாம்
பச்சை ஓலை பாப்பா!- பாட்டி


குழந்தை இலக்கியம் ♦ 83