பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42

நெற்றியிற் பட்டை நாமம்;
நெடுந்தோளிற் கயிற்றாற் கோத்த
விற்புரு வத்தார்க் கேற்ற
விதவித வளையல்; சால்வை;
சுற்றிலும் காதை மூடும்
பாகையோ கிழிந்த சோமன்;
மற்றொரு தோளில் தொங்கும்
வளை,மஞ்சள் நிறைந்த பெட்டி! 1

வழியெலாம் வளையற் காரர்.
‘வளையலோ வளையல்!’ என்பார்!
விழியினாற் குளிர்மை காட்டி,
‘இந்தாங்கோ!’ எனவி ளித்துப்,
பழகிய மக்கள் போலப்
பக்கத்தில் வந்து குந்திக்
குழிவிழுங் கன்னப் பெண்கள்,
‘விலையென்ன? கூ’றென் பார்கள்! 2


குழந்தை இலக்கியம் ♦ 87