பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43

ட்டார் இவர் தட்டார்!-நாளும்
தட்டா விட்டாற் கெட்டார்!

பொட்டுச் செய்து கொடுப்பார்-இடை
போடும் நாணல் கொடுப்பார்;
தட்டு முட்டுச் சாமான்-வெள்ளித்
தடியும் செய்து கொடுப்பார்!

காது குத்த வருவார்-பெண்கள்
காலுக் கணியும் தருவார்;
மாதர் நெற்றிச் சுட்டி-தோள்
வளையம் செய்தும் தருவார்!

ஓவியரைப் போன்றார்; -கல்லை
உடைக்கும் சிற்பி போன்றார்;
பாவி யற்றி வாழும்-ஏழைப்
பாவலரைப் போன்றார்!


குழந்தை இலக்கியம் ♦ 89