பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44

சங்குக் கற்றை தலைய ழுத்தும்;
கையில் மொந்தை இருக்கும்;
கொசுவம் தொங்கும்; குனிந்த கத்திப்
பிடியும் எட்டிப் பார்க்கும்! 1

கூடை முறமும் கட்டிக், கூழை
வாங்கிக் குடித்துப் பிழைப்பாள்;
காடு மேடு சுற்றி, ஈச்சன்
கசங்கை வெட்டிச் சேர்ப்பாள் 2

முறத்தின் முதுகில் அகணிப் பட்டை
கோத்துக் கோத்து இழுப்பாள்;
உறவுத் தாலி மெலிந்த கழுத்தில்;
உடலில் நரம்புப் புடைப்பே! 3


குழந்தை இலக்கியம் ♦ 91