இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிவைப் பெருக்கும் கூடம்;
அன்பைப் பெருக்கும் கூடம்;
மறைவு நீக்கி உம்மை
மனிதன் ஆக்கும் கூடம்! 1
ஒழுக்கம் சேர்க்கும் கூடம்;
உணர்வைச் சேர்க்கும் கூடம்;
வழுவை நீக்கி உம்மை
வாழ வைக்கும் கூடம்! 2
கண்ணை அளிக்கும் கூடம்;
கருத்தைக் கொடுக்கும் கூடம் ;
எண்ணம் தன்னில் தூய்மை
என்றும் சேர்க்கும் கூடம்! 3
கடமை காட்டும் கூடம்;
கைத்தொழில் பழக்கும் கூடம்;
மடமை போக்கி உம்மை
வாழ வைக்கும் கூடம்! 4
100 கவிஞர் வாணிதாசன்