பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பள்ளிக்கூடம் - II
48

ள்ளிக் கூடம் போவோம்!-நாம்
பள்ளிக் கூடம் போவோம்!
துள்ளி ஒடி ஆடி-நாளைத்
தொலைத்தால் என்ன உண்டாம் ? 1

உடலைத் தேய்த்துக் குளித்தே-வீட்டில்
உள்ள ஆடை உடுத்தே
பொடியோ டெண்ணெய் தோசை-அப்பம்
புசித்து நூலை எடுத்தே- 2

அடக்கத் தோடே செல்வோம்!-மணி
அடிக்கு முன்னே செல்வோம்!
இடக்கு வழியிற் செய்தால்-காண்போர்
ஏசிப் பழிப்பார்! வேண்டாம்! 3

தோழ ரோடு சேர்ந்தே-நூலைத்
துருவித் துருவி ஆய்ந்தே
ஆழ மாகக் கற்றே-நல்ல
அறிவை யடைய வேண்டும்! 4


102 ♦ கவிஞர் வாணிதாசன்