பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49

துள்ளிக் குதித்து வருகின்றார்
பள்ளிச் சிறுவர் சாலைக்கு;
கள்ளம் கபடம் அறியாதார்;
கவலை ஒன்றும் தெரியாதார்! 1

பேச்சைச் சிரிப்பைக் கேட்பீரே;
பின்புற மிருந்து பார்ப்பீரே;
கூச்சம் இன்றி அவர்எண்ணக்;
கோட்டை நுழைந்து பார்ப்பீரே! 2

பாட்டம் ஆட்டம் பார்த்திடுவீர்;
பரிகசச் சொல்லைக் கேட்டிடுவீர்;
கூட்ட மாக அவர்களுக்குள்
செய்யும் குறும்பைக் கண்டிடுவீர்! 3

அடக்கம் ஒடுக்கம் கற்றிடுவோம்;
அன்புப் பெருக்கைக் கொண்டிடுவோம்;
துடுக்கை விட்டுச் சிறுவரைப்போல்
தூய எண்ணம் பெற்றிடுவோம்! 4


104 ♦ கவிஞர் வாணிதாசன்