பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50

படிக்க வேண்டும் ஆண்பெண்!
படித்தால் உண்டாம் முக்கண்!
படிக்கச் சிறக்கும் வாழ்வு!
படியார் அடைவார் தாழ்வு! 1

வயலை விளைக்கப் படிப்பு!
வேண்டும்! செந்நெல் முடிப்புப்
பெயலே இல்லாப் போதும்
பெருகச் செய்யும் படிப்பு! 2

சின்னச் சின்னத் தொழிலைச்
செழிக்கச் செய்யும் படிப்பு!
பொன்னை அளிக்கும் படிப்பு!
புகழை அளிக்கும் படிப்பு! 3

வீட்டைத் துலக்கப் படிப்பு!
வீரம் செழிக்கப் படிப்பு!
நாட்டைத் துலக்கப் படிப்பு!
நாளும் வேண்டும் படிப்பு! 4


குழந்தை இலக்கியம் ♦ 105