பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52

ட்டாயம் கல்வி! கட்டாயம் யார்க்கும்!
கட்டாயம் கல்வி! கட்டாயம் என்றும்!
பொட்டல் வெளிக்கு நிழலைப் போலப்
பூத்த மலர்க்கு மணத்தைப் போல- 1

நட்ட நிலத்து வரப்பைப் போல
நன்செய் புன்செய் மழையைப் போலக்
கட்டிய வீட்டுக்குக் கதவைப் போலக்
கைவி ளக்குக்கு நெய்யைப் போல- 2

கட்டை வண்டிக்(கு) ஆனியைப் போலக்
காளை மாட்டுக்குக் கயிற்றைப் போலப்
பெட்டி பேழைக்குச் சாவியைப் போலப்
பெரிய குளத்திற்குப் படியைப் போல-3


110 ♦ கவிஞர் வாணிதாசன்