இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிரிக்க வேண்டும் பாப்பா-நீ
சிணுங்கக் கூடாது!-படிக்கச்
சிணுங்கக் கூடாது!
விரித்து நூலைத் தூக்கிப் பிடித்து
விரைவில் வீட்டு வேலை முடித்து-
தலையைச் சீவி வாரி முடித்து,
தங்கச் சிலைபோல் பள்ளி அடுத்து,
விலையில் கல்வி கற்று முடித்து,
வீட்டுக் கடங்கி நடக்க வேண்டும்!
பெற்றோர் சொல்லைக் கேட்க வேண்டும்!
பெரியோர் சொல்லைக் கேட்க வேண்டும்!
கற்றோர் உன்னைக் கண்டால்
வாரிக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும்!-
குழந்தை இலக்கியம் 119