இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உன்றன் வேலை முதல்வேலை
பள்ளிக்(கு) ஒடிப் படிப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
கணக்கர் உரைசெவி மடுப்பதுவே!4
உன்றன் வேலை முதல்வேலை
ஒப்பாய்க் கற்றுத் தெளிவதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
ஊருக் குழைத்து வாழ்வதுவே!5
உன்றன் வேலை முதல்வேலை
ஒண்பொருள் தேட முனைவதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
ஒக்க உண்டு வாழ்வதுவே!6
உன்றன் வேலை முதல்வேலை
அன்னை தந்தைக் குதவுவதே!
உன்றன் வேலை முதல்வேலை
உற்றார் ஊரார்த் தாங்குவதே!7
உன்றன் வேலை முதல்வேலை
உண்மை ஒளிக்கா திருப்பதுவே!
உன்றன் வேலை முதல்வேலை
ஒழுக்கம் உயிராய் ஓம்புவதே!8
உன்றன் வேலை முதல்வேலை
ஊரைத் திருத்த முயலுவதே!
உன்றன் வேலை முதல்வேலை
ஊரை வாழ வைப்பதுவே! 9
122 கவிஞர் வாணிதாசன்