இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஊரில் வெள்ளம் வந்ததே!-ஏரி
உடைப்பெ டுத்துக் கொண்டதே!
ஊரில் உள்ள யாவுமே-வெருண்டு
ஓடி எங்கும் தாவுமே!
1
பெட்டி தூக்கி ஓடினர்-பொருள்
கட்டித் தூக்கி ஓடினர்;
தட்டுத் தூக்கி ஓடினர்-வெள்ளித்
தவலை தூக்கி ஓடினர்!
2
ஊரை விட்டே ஏகினர்-தத்தம்
உடைமை கொண்டு போயினர்!
ஊரில் ஒருவன் மட்டுமே-தன்
உடைமை யாவும் விட்டுமே
3
132 ★ கவிஞர் வாணிதாசன்