பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



65

பகைவர் நாட்டுப் பட்டாளம்
படர்ந்தது சிற்றூர் வட்டாரம்!
பகைவர் எதிர்க்க உள்ளூரார்
பதுங்கி இருந்தார் மலையுள்ளே!

1

இந்தச் செய்தி சிற்றூரில்
இருந்த சிறுமி நன்கறிவாள்;
வந்து வந்து பட்டாள
வகையைச் சொல்லிப் போய்விடுவாள்!

2

வந்து திரும்பும் வழியினிலே
வளைத்தார் சிறுமியைப் பகைநாட்டார்!
‘எந்த இடத்தில் உள்ளூரார்
மறைந்தார்? இடத்தைக் காட்’டென்றார்!

3

தந்தை நாட்டைத், தாய்நாட்டைத்,
தன்னை ஈன்ற பொன்னாட்டைச்
சிந்தை எண்ணி வணங்கியே,
‘தெரியா’ தென்றாள் சிணுங்கியே!

4


140 ♦ கவிஞர் வாணிதாசன்