இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாய்ந்தா டம்மா! சாய்ந்தாடு!
தங்கச் சிலையே! சாய்ந்தாடு!
காயும் நிலவே! சாய்ந்தாடு!
கண்ணே ! மணியே! சாய்ந்தாடு!
1
முத்தம் தருவேன்! சாய்ந்தாடு!
முத்தே! பவளமே! சாய்ந்தாடு!
கொத்தும் கிளியே! சாய்ந்தாடு!
தோகை மயிலே! சாய்ந்தாடு!
2
பொன்னே! மணியே! சாய்ந்தாடு!
புதுமணப் பூவே! சாய்ந்தாடு!
கன்னற் சுவையே! சாய்ந்தாடு!
காலை அழகே! சாய்ந்தாடு!
3
அத்தை மகளே! சாய்ந்தாடு!
அழகின் பெருக்கே! சாய்ந்தாடு!
குத்து விளக்கே! சாய்ந்தாடு!
குளிர்ந்த காற்றே! சாய்ந்தாடு!
4
குழந்தை இலக்கியம் ♦ 3