இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழுங்கள் மொழியே!- அதை
தமிழுங்கள் விழியே!
தமிழுங்கள் உயிரே! – உயர்
தமிழுங்கள் பயிரே!
1
தமிழ்வானப் பரிதி!– இசை
தருமின்பச் சுருதி!
தமிழும்மை ஈன்றாள்!– அவள்
அமிழ்தினைப் போன்றாள்!
2
தமிழ்நறுங் காற்று – பிறர் .
தரும்மொழி கூற்று!
தமிழுங்கள் சோலை – தன்னில்
தழைத்திட்ட மாலை!
3
குழந்தை இலக்கியம் ♦ 151