இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வானச் சுடரே! சாய்ந்தாடு!
வடித்த தேனே! சாய்ந்தாடு!
காணக் குயிலே! சாய்ந்தாடு!
காட்டுப் புறாவே! சாய்ந்தாடு!5
பாலும் தருவேன்! சாய்ந்தாடு!.
பழமும் தருவேன்! சாய்ந்தாடு!
மேலும் மேலும் சாய்ந்தாடு!
விலையில் மணியே! சாய்ந்தாடு!6
கவிஞர் வாணிதாசன்