பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
73

ண்னெதிர் கண்டபல-இயற்கைக்
காட்சியின் தோற்றமெலாம்
மண்ணதில் தீட்டிவைத்தான்-தமிழன்
வண்ணக் கலவையதால்! 1

தெள்ளிய தெள்ளமுதாய்த்-தமிழைச்
சீருடன் செப்பனிட்டான்!
உள்ளங் கவர்கவிதை-அளித்தான்
உணர்வுப் பெருக்கதனால2

கல்லை உயிர்ப்பித்தான்-தமிழன்
கற்பனை உச்சியெட்டி!
வில்லின் துணைவலியால்-உலகில்
வெற்றி முரசடித்தான்! 3

முன்னவர் காலமென்பார்-இவையெலாம்
முற்றும் அறியாதார்!
இன்னும் வலியுடையான்-தமிழன்
இமயமும் சாடுதற்கே! 4


குழந்தை இலக்கியம் ♦ 159