இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அம்புலி அக்கா வா! வா!
ஆடலாம்! பாடலாம்! வா! வா!
செம்புப் பாலைக் குடிக்கலாம்!
சேர்ந்து சேர்ந்தே ஆடலாம்! 1
பாட்டுப் பாடிக் குதிக்கலாம்!"
பள்ளிக் கோடிப் படிக்கலாம்!
காட்டுப் பூவைப் பறிக்கலாம்!
கட்டி மாலை தெர்டுக்கலாம்! 2
வீடு கட்டிச் சமைக்கலாம்!
வெளியில் திண்ணை அமைக்கலாம்!
ஆடு கோழி வளர்க்கலாம்!
அமியில் சாந்தை அரைக்கலாம்! 3
பொம்மை வைத்தே ஆடலாம்!
புதுப்புது நகைகள் போடலாம்!
அம்மா போல நடைநடந்தே
அங்கும் இங்கும் போகலாம்!4
குழந்தை இலக்கியம் ♦ 5