பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓடை அருவி உயர்மலைச் சாரல்
ஆடும் மூங்கில் அலைக்கும் காற்றும்
பாடும் குயிலும் பயிலுமுன் தேமொழி! 8

ஈடிலா மொழியே! ஈன்றாய் மொழியே!
இயலிசை கூத்தை அளித்தாய்!
வாழி கோடி வணக்கம் வணக்கம் தாயே!

பொன்னொளி வீசும் புதுவான் பரப்பும்
புதரிடை ஆடும் புட்கள் விளிப்பும்
என்னென் றுரைப்பேன்! என்னென் றுரைப்பேன்! 9

கன்னித் தமிழே! உன்னைப் போலக்
கண்செவி மூக்கு மெய்வாய்க் கென்றும்
மன்னிய இன்பம் வழங்கிய தில்லை!

தென்றல் இனிமை செழுநிலாக் குளிர்மை
செவ்விதழ்ச் சிறுவர் சிரிப்பின் வளமை
என்றும் தமிழ்மொழிக் கிடா கும்மோ? 10

மன்றில் இசைக்கும் யாழும் குழலும்
மத்தள முழக்கும் கைத்தாள ஒலியும்
என்றும் ஈடோ? ஈடோ? வணக்கம்!


164 ♦ குழந்தை இலக்கியம்