இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தம்பி! சோறு! வாய்திற!
தளிரே சோறு! வாய்திற!
கொம்புத் தேனே! வாய்திற
குளத்துப் பூவே! வாய்திற! 1
காலைச் சுடரே! வாய்திற!
கட்டித் தயிரே வாய்திற!
சோலை அழகே! வாய்திற!
குழந்தைப் புலியே! வாய்திற! 2
தங்கக் கட்டி! வாய்திற!
தம்பி! தம்பி! வாய்திற!
சிங்கக் குட்டி! வாய்திற!
சிறுசோ றுண்ண வாய்திற 3
6 ♦ கவிஞர் வாணிதாசன்