பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

வாடா! வாடா! கண்ணு!
வாயில் என்னடா மண்ணு ?
சோறு வாங்கி உண்ணு! 1

அம்மா புடைவை பட்டு!
அழுதால் தலையிற் குட்டு!
அடுப்பில் வேகுது பிட்டு! 2

தம்பி! தம்பி! வாப்பா !
தடுக்கிற் சிரிக்குது பாப்பா !
கதவுக் கிடுவது தாழ்ப்பா! 3

வாடா! வாடா! மூக்கா!
வாங்கலாம் கடையிற் சீக்கா!
மரத்திற் கூவுது காக்கா! 4

தங்கைக்கு மூத்தவள் அக்கா!
தம்பிக்குப் போட்டாள் சொக்கா!
தலைமேற் பறக்குது வக்கா! 5


8 ♦ கவிஞர் வாணிதாசன்