பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

காலை வந்தது! காலை வந்தது!
கவின்மிகு விடியற் காலை வந்தது!

சாலை மரத்தில் தென்றல் தவழச்
சருகு பனியில் நனைந்து கிடக்க
மாலைப் பூக்கள் வருத்தம் காட்ட,
வானில் வெள்ளி மயங்கிக் கிடக்க- காலை

சேவல் கூவிக் காதைக் கிழிக்கச்
சிறுஒளி கீழ்வான் இருளை அழிக்கப்,
பூவிற் பனிநீர் உருண்டு கிடக்கப்,
புதரிற் சிட்டு பாடிக் களிக்க- காலை

செம்பொன் உருக்கைக் கீழ்வான் காட்டத்,
தேனுண்டு வண்டு புரண்டு கிடக்கத்
தம்பி விழித்துத் ‘தாத்தா’ பாடத்,
தங்கை எழுந்து கோலம் போட- காலை .


குழந்தை இலக்கியம் ♦ 11