இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அந்தி வந்ததே அந்தி!
செந்தீ மேல்வான் சிந்திச் சிந்தி- அந்தி
வெந்து தணிந்த சிற்றூர் போலும்
மேற்கு வான் விரிவு தோணும் !-- அந்தி
செம்மண் மேட்டு நிலத்தைப் போலத்
தெரியும் வானில் செறிந்த மேகம்!
வெம்மை மாறிக் குளிர்ந்த காற்று
வீச மணமும் வந்து வீசும்!--- அந்தி
வானில் ஓடிய செம்மைக் கோடு
வாள ரிந்த இரத்தக் காடு!
கானும் மலையும் செந்தீ மேடு!
கண்ட பிறையும் யானைக் கோடு!-அந்தி
குயில்கள் கூவும் குளிர்ந்த காவில்!
குடித்து வண்டு பாடும் பூவில் !
அயலில் உள்ள துளிர்த்த மாவில்
அடங்கப் பட்கள், அடங்கும் செவ்வான்! அந்தி
குழந்தை இலக்கியம் ♦ 13