பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மழை -II
9

கொம்பு சுற்றி அடித்ததே!
குமுறி வானம் இடித்ததே!
அம்பைப் போல மழையும் பெய்தே
அல்லிக் குளத்தை நிறைத்ததே!.1

மின்னல் மின்னி இடித்ததே!
வீட்டில் சாரல் அடித்ததே!
சன்னல் வழியாய் நீர்பு குந்து
தரையில் பாயை நனைத்ததே!2

கன்னல் செந்நெல் சாய்ந்ததே!
காய்த்த முருங்கை மாய்ந்ததே!
தென்னை பனையை ஆட்டி அலுக்கித்
தெருவில் மழையும் ஓய்ந்ததே! 3

இருண்ட வானம் திறந்ததே!
எழுந்த கதிரும் விரிந்ததே!
இரண்டு கரையும் வெள்ளம் புரண்டே
ஏரி வந்து புகுந்ததே! 4


குழந்தை இலக்கியம் ♦ 17