பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

கத்துங் கடலே! இரவெல்லாம்
கரையைச் சீறி மோதுவதேன்?
பித்துப் பிடித்து விட்டதோ?
பிரிவுத் துயர்மே லிட்டதோ? 1

குஞ்சு பொரித்த பாம்பைப்போல்
குமுறிப் பாய்ந்து வருகின்றாய்;
மஞ்சுக் குனக்கும் இருக்கின்ற
வாழ்க்கைத் தொடர்பின் முறையாதோ?2

வானும் நீயும் ஒருதாயின்
வயிற்றில் உதித்த இருவர்போல்
மானும் தன்மை நிறத்தாலே;
வளர்த்தவர் யாரே கூறாயோ?3

பாடு பட்டுத் துய்க்காது
பதுக்கி வைக்கும் கஞ்சன்போல்
ஈடில் முத்தைப் பவழத்தை
எவருக் காகக் கொண்டுள்ளாய்? 4


18 கவிஞர் வாணிதாசன்