பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

காரைத் தேக்கி ஊரைக் காக்கும் ஏரி!-நெற்
களையெடுத்துப் பசியைப் போக்கும் சேரி!
ஏரையோட்டி நெல்வி ளைக்கப் போமோ?-வான்.
ஏரியின்றேல் உணவைக் காணப் போமோ? 1

மாரி இல்லாப் போதும் உயிர்வாழ-மழை
தேக்கி வைக்கக் கண்டவழி ஏரி!
நீர்இறைத்தே கன்று காலி ஊட்ட-மக்கள்
தேர்ந்தெடுத்த நீள்உழைப்பே ஏரி! 2

ஏரிக்குத்தாய் ஆற்று வாய்க்கால் ஆகும்!-அந்த
ஏரி, சூழ்ந்த ஊருக்குத் தாய் ஆகும்!
சேரி மக்கள் வாழ்வூன்றும் கோல்கள்-நீரைச்
சேந்தி வயல் சென்றோடும் கால்கள்! 3

கரையில் எங்கும் நீண்டபனைச் சாலை!-அலை
காற்றடிக்கப் படபடக்கும் ஒலை!
நுரைகள் பூக்கும் மதகிடையில் வெண்ணெய்!-ஏரி
நொய்மணலோ காற்றுவாங்கும் திண்ணை4


குழந்தை இலக்கியம் ♦ 23