பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14

தோப்புக் கிடையில் சிறுகுடிசை!
தொடர்ந்து தொடர்ந்து பல்குடிசை!
காப்புக் கதவு கிடையாது!
காற்று வாங்கும் பலகுடிசை! 1

வீட்டின் முன்னர்ச் சிறுவேலி!
வேலிக் கிடையில் மண்பானை!
ஆட்டுக் கல்லில் வெறும்பானை!
அடுப்பின் மீதோ பெண்பூனை! 2

வாயிற் படியில் முருங்கைப்பூ
பாயைப் போட்டாற் போலிருக்கும்!
தாயைக் காணாச் சிறுகுழந்தை
தடவி எடுக்கும் வெறுமொந்தை! 3

எங்கோ இரண்டு கல்விடும்
இருக்கும்! அவையும் பழம்விடே!
தங்கும் திண்ணை மீதெல்லாம்
காய்ந்த வராட்டி பழஞ்சாலாம்! 4


குழந்தை இலக்கியம் ♦ 27