இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறையில் இருக்குது கண்ணாடி!
அப்பா அம்மா பின்னோடி
மறைந்து நின்றால் கண்ணாடி
வந்ததை விளக்கும் கண்ணாடி! 1
தலையைச் சீவச் சீவும்!
தம்பி தாவத் தாவும்!
மலைத்து நின்று பார்த்தால்
மலைத்து நின்று பார்க்கும்! 2
சாந்தெ டுத்தால் எடுக்கும்!
தலைமு டித்தால் முடிக்கும்!
மாந்த ளிரைப் போன்ற
வாய்தி றந்தால் திறக்கும்! 3
வீட்டுக் கழகு கண்ணாடி!
விலைக்கு வாங்கிய கண்ணாடி!
காட்டக் காட்டும் கண்ணாடி!
தானே காட்டாக் கண்ணாடி! 4
குழந்தை இலக்கியம் 35