பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18

ண்ணால் ஆன விளக்கு
மாடத்(து) அகல் விளக்கு !
எண்ணெய் வார்த்தால் எரியும் !
இல்லை யேல்திரி கரியும்! 1

காலை படுத்துத் தூங்கிக்
கண்வி ழிக்கும் மாலை !
மாலை இருந்து காலை
வரையும் எரியும் வேலை! 2

தங்கை தூங்கும் போதும்,
தம்பி தூங்கும் போதும்
மங்கி எரிந்து விழிக்கும் !
வந்த இருளை ஒழிக்கும் ! 3


குழந்தை இலக்கியம் ♦ 37