இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எங்கள் வீடு கல்வீடே!
என்னை வளர்த்த நல்விடே!
தெங்கும் மாவும் தோட்டத்தில்!
சிறிய ஊஞ்சல் கூடத்தில்!
வீட்டின் முன்னே சிறுபந்தல்!
வேய்ந்த கீற்றோ வெறுங்கந்தல்!
வீட்டின் முன்னர் இருதிண்ணை!
மேயும் கோழிக் கதுபண்ணை!
ஆட்டுக் குட்டி ஒருகாலில்!
ஆவின் குட்டி ஒருகாலில்!
மாட்டிக் கட்டிய தாழ்வாரம்
மழை தாலோ ஒரேஈரம்!
அண்ணன் தம்பி படிப்பதற்கும்,
அக்காள் பின்னி முடிப்பதற்கும்,
திண்ணை ஓரம் நடையொன்று
திகழும் சன்னல் ஒளிகொண்டு!4
குழந்தை இலக்கியம் ♦ 45