பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24


யானை வந்தது பின்னே!-மணி
ஓசை வந்தது முன்னே!

முறத்தைப் போலக் காதை ஆட்டி,
முன்னும் பின்னும் கையை நீட்டி
அறுத்த துண்டு பனைக்கால் தூக்கி,
அசைந்த சைந்தே நடையைக் காட்டி- யானை

யானை நீண்ட கொம்பு வாழைத் தண்டு!
நெற்றி மேடு பொரியற் சட்டி!
நீண்ட பையைப் போன்ற கையை
நிமிர்த்தித் தூக்கி முன்சு ருட்டி- யானை


குழந்தை இலக்கியம் ♦ 49